உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ்

அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களை மற்ற நடிகர்கள் சந்திப்பது ஒரு அபூர்வமான விஷயம்தான். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரை எப்போதாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது பற்றி மற்ற நடிகர்களும், நடிகைகளும் ஒரு மகிழ்ச்சியில் அதைப் பற்றிச் சொல்வார்கள்.

காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாகவும் உயர்ந்து நடித்து வருபவர் சதீஷ். அஜித்தை நேரில் சந்தித்தது பற்றி, “அஜித் சாரிடமிருந்து ஒரு இனிப்பான ஆச்சரியம். மிகவும் பணிவான ஜென்டில் மேன்… லவ் யு சார் அண்ட் ஷாலினி அண்ணி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் காமெடி நடிகராக நடித்துள்ள சதீஷ் இதுவரை அஜித் படத்தில் நடித்ததில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !