விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு?
தமிழில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி அடுத்து, தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் தபு, துனியா விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு முதலில் 'பெக்கர்' என்ற தலைப்பை ஆலோசித்து வந்ததாகத் தகவல் வெளியானது. தற்போது 'பிக்ஷாம் தேஹி' என்ற ஹிந்தித் தலைப்பை முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வந்துள்ளது. 'பிக்ஷாம் தேஹி' என்றால் தமிழில் 'பிச்சை போடுங்கள்' என்று அர்த்தம்.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது தற்போது அதிகமாகி உள்ள நிலையில் ஹிந்தியில் தலைப்பு வைத்தால் அது சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் ஹிந்தி சர்ச்சை அவ்வப்போது எழுந்து வருகிறது.
அதே சமயம் மற்ற மொழிகளில் இந்தப் பெயரை வைத்தாலும் தமிழில் வேறு ஒரு பெயரை வைக்கவும் வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அதற்குக் காத்திருக்க வேண்டும்.