உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை

அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை

மலையாள சினிமாவை சேர்ந்தவர் நடிகை அனந்திகா சனில்குமார். தமிழில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் நடித்தார். தொடர்ந்து விக்ரம் பிரபுவின் ரெய்டு படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் அவர் நடித்துள்ள 8 வசந்தலு படம் ஜூன் 20ல் ரிலீஸாகிறது. இதுதொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் தனது உச்சபட்ச ஆசையை வெளிப்படுத்தினார்.

அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமா தாண்டி சட்டமும் படித்து வருகிறேன். எனக்கு அரசியல் ஆசை உண்டு. அது தான் எனது உச்சபட்ச ஆசை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறணும். பெண்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. அதேசமயம் இப்போது அரசியலுக்கு வர மாட்டேன். ஆனால் 40 வயதில் அரசியலில் பயணிக்க விரும்புகிறேன்'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !