மேலும் செய்திகள்
'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு!
93 days ago
'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
93 days ago
மலையாள திரையுலகில் முப்பது வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாகவே வலம் வருபவர் மஞ்சு வாரியர். சினிமாவில் எந்த பின்புலமும் ஆதரவும் இல்லாமல் தனது நடிப்பு திறமையால் முன்னேறியவர். இந்த நிலையில் ஊர்வசி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள தெரி மெரி என்கிற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார்.
விழாவில் ஊர்வசி பேசும்போது, “இன்ஸ்பெக்டர் பல்ராம் என்கிற படத்தில் நான் நடித்து கொண்டிருந்தபோது அந்த சமயத்தில் ஒருவர் கையில் ஆல்பம் ஒன்றுடன் சூட்டிங் ஸ்பாட்டில் அவ்வப்போது என் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தார். அப்போது அந்த படப்பிடிப்பு நடந்த வீட்டின் உரிமையாளர் அவரை அழைத்து என்னிடம் அறிமுகப்படுத்தி, இவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவரது புகைப்படங்களை பாருங்கள் அவருக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டார். நானும் அந்த ஆல்பத்தை வாங்கி புரட்டிப் பார்த்தேன். அப்போது குட்டி மஞ்சு வாரியர் மிகப்பெரிய கண்களுடன் என்னை கவர்ந்தார்.
அவரது தந்தையிடம் இதற்கு முன் மகள் ஏதும் படங்களில் நடித்திருக்கிறாரா என்று கேட்டேன். இதுவரை நடிக்கவில்லை. ஆனால் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார் என்று அவரது தந்தை கூறினார். அந்த சமயத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் நம்பிக்கையாக ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று கூறியதும் நான் இயக்குனர் வி சசியுடன் சொல்லி அவருக்கு வாய்ப்பு வாங்கி தர முயற்சி செய்கிறேன் என்று என்று கூறினேன். அந்த சமயத்தில் படப்பிடிப்பு முடியும் நேரம் என்பதால் ஐவி சசி கிளம்பி சென்று விட்டார். அது ஒரு சாதாரண தருணமாக அப்படியே கடந்து சென்று விட்டது. ஆனால் இப்போது வரை நான் மஞ்சுவிடம் இது பற்றி கூறியது இல்லை” என்று பேசினார்.
ஊர்வசி பேசுவதை ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு கேட்டுக் கொண்டிருந்த மஞ்சு வாரியர் தான் பேசும்போது, அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் நடிகையாக அடி எடுத்து வைத்துள்ள ஊர்வசியின் மகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
93 days ago
93 days ago