உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன்

நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன்


பாரம்பரிய, அரிய வகை நெல்களை பாதுகாத்து வைத்தவர் நெல் ஜெயராமன். 169 நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். விவசாயிகள் மத்தியில் அவருக்கு அப்படியொரு நல்ல பெயர். புற்று நோய் பாதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி 2018ல் காலமானார். அப்போதே அவரை ஆஸ்பத்திரியில் வந்து நலம் விசாரித்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் மகன் படிப்பு செலவை ஏற்பதாகவும் வாக்கு கொடுத்து இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை கவனித்தவர், இந்த ஆண்டு அவரை கல்லுாரியில் சேர்த்து இருக்கிறார்.

இது குறித்து முகநுாலில் பதிவிட்டுள்ள நந்தன் பட இயக்குனர் சரவணன், 'பலர் இப்படி வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால், மறந்துவிடுவார்கள். சிவகார்த்திகேயன் 7 ஆண்டுகளாக நெல் ஜெயராமன் மகன் கல்விக்கு உதவி செய்கிறார். தவிர, படிப்பு, பரீட்சை குறித்து அவ்வப்போது அவரிடம் ஆர்வமாக கேட்டு அறிகிறார்'' என்று பதிவிட்டுள்ளார். இதுவரை தான் யாருக்கும் உதவிகள் செய்வதாக சிவகார்த்திகேயன் சொன்னது இல்லை. கல்வி, உதவிகள் விஷயத்தில் பப்ளிசிட்டி தேடியதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !