உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா

கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா


'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இப்போது சினிமாவில் ஆர்வம் காண்பிக்கிறார். பயர் படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். அந்த படமும் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. எக்ஸ்ட்ரீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்தார். இப்போது ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த்துடன் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் தகவல். அவருக்கு ஹோம்லி முகம் என்பதால் அந்த மாதிரியே அதிக கதைகள் வருகிறதாம்.

'பயர்' படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் இனி அப்படிப்பட்ட கதைகளில் அதிகம் நடிப்பது இல்லை என ரக்ஷிதா முடிவெடுத்து இருக்கிறாராம். இதற்கிடையில், அவரை மையமாக வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை பலர் உருவாக்கி வருகிறார்கள். அவரை வெப்சீரியல்களில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !