ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்!
ADDED : 153 days ago
ஹிந்தி, கன்னட படங்களில் நடித்து வந்த ருக்மணி வசந்த், 'அப்புடோ இப்புடோ எப்புடோ' என்ற படத்தில் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக தெலுங்கில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மதராஸி' படத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் ருக்மணி வசந்த். இந்த படத்தை கேஜிஎப், சலார் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் இந்தப் படம் உருவாகிறது.