உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் கூலாக இருந்த விஜய்! - மமிதா பைஜூ சொன்ன தகவல்

ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் கூலாக இருந்த விஜய்! - மமிதா பைஜூ சொன்ன தகவல்


எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், ஸ்ருதிஹாசன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அரசியல் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை குறித்து படத்தில் நடிக்கும் யாருமே மீடியாக்களிடத்தில் வார்த்தை விடுவதில்லை. அந்த அளவுக்கு ரகசியம் காத்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் ஜனநாயகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை மமிதா பைஜு, விஜய் குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறும்போது, ''விஜய் சாரை பொறுத்தவரை படப்பிடிப்பு தளத்துக்கு நேரம் தவறாமல் ஆஜராகி விடுவார். ஒரு நாள் கூட அவர் தாமதமாக வந்ததில்லை. அதோடு பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தாலும் எந்த டென்ஷனையும் அவர் காட்டிக் கொள்ள மாட்டார். எப்போதுமே ரொம்ப கூலாக காணப்பட்டார். எதிர்மறையான விஷயங்கள் நடத்தால் கூட அதற்கு தனது கோபத்தை வெளிப்படுத்தாமல் அதைகூட கூலாகவே கையாண்டார்.

சில சமயங்களில் அவர் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வாக அமர்ந்திருக்கும் போது சில விஷயங்களை அவரிடத்தில் பகிர்ந்து கொண்டு உள்ளேன். என்றாலும் அது குறித்து பெரிதாக பதில் கொடுக்க மாட்டார். ஓரிரு வார்த்தையோடு முடித்துக் கொள்வார். இந்த ஜனநாயகன் படத்தில் மூலம் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பது பெரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது'' என்று தெரிவித்திருக்கிறார் மமிதா பைஜூ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !