'பறந்து போ' படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் ஜூன் 24ல் ரிலீஸ்!
ADDED : 149 days ago
'கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராம், தற்போது இயக்கியுள்ள படம் 'பறந்து போ'. மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அஞ்சலி, ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வருகிற ஜூலை நான்காம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார்.
அதோடு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'கஷ்டம் வந்தா' என்று தொடங்கும் ஒரு பாடலை யுவன் சங்கர் ராஜா பின்னணி பாடியுள்ளார். இந்த பாடல் வருகிற ஜூன் 24ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'சன் பிளவர்' மற்றும் 'டாடி ரொம்ப பாவம்' போன்ற பாடல்கள் வெளியாகியுள்ளன.