உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி

'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி


எப்எம் வானொலியில் தொகுப்பாளராக இருந்து, சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாக உயர்ந்து அடுத்து இயக்குனராகவும் மாறியவர் ஆர்ஜே பாலாஜி. 2020ல் ஓடிடியில் வெளியான 'மூக்குத்தி அம்மன்', 2022ல் தியேட்டர்களில் வெளியான 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை என்ஜே சரவணன் என்ற இயக்குனருடன் இணைந்து இயக்கினார். தனி இயக்குனராக அவர் இயக்க ஆரம்பித்த படம் 'கருப்பு'.

சூர்யாவின் 45வது படமாக ஆரம்பமான இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை நேற்று பாலாஜியின் பிறந்தநாளில் வெளியிட்டார்கள். இதற்கு முன்பு தான் இயக்கிய இரண்டு படங்களிலும், படங்களில் நடித்த போதும் தன்னுடைய பெயரை 'ஆர்ஜே பாலாஜி' என்று போட்டு வந்தவர், நேற்றைய 'கருப்பு' பட போஸ்டரில் தன்னுடைய பெயரை 'ஆர்ஜேபி' என சுருக்கிக் கொண்டுள்ளார்.
இது குறித்து பாலாஜியிடம் கேட்டதற்கு, ''ஊர்வசி மேடம் எனக்குக் கால் பண்ணி ஆர்.ஜே.பாலாஜினு போடாத. 'ஆர்ஜேபி' போடுனு சொன்னாங்க. பெரியவங்க பெயரெல்லாம் சொல்லி, 'அவங்க பெயரெல்லாம் மூனு எழுத்து. அதுமாதிரி நீயும் வச்சுக்கோ. அடுத்தப் படத்தில இருந்து பெயர மாத்திடு'னு சொன்னாங்க. நியூமராலஜி படி ஊர்வசி மேடம் சொல்றதும் சரியாதான் இருக்குனு எனக்கும் தோனுச்சு. ஆனா.. கொஞ்சம் எனக்குக் கூச்சமும் தயக்கமும் இருந்துச்சு'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !