மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
103 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
103 days ago
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நேற்று வெளியான படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கில் தயாராகி, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி பான் இந்தியா படமாக வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் 'சமீரா' என்ற உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. அவர் நடித்து வெளிவந்த படங்களில் 'குபேரா'வின் இந்த சமீரா கதாபாத்திரமும் பேசப்படும் ஒன்றாக எதிர்காலத்தில் அமையும் என விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
படம் குறித்தும், தனது சமீரா கதாபாத்திரம் குறித்தும் நன்றி தெரிவித்து இன்ஸ்டா தளத்தில் நீண்ட ஒரு பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. அதில், “குபேரா' படத்தில் சமீரா…சேகர் கம்முலா இயக்கிய படம். அவரைப் பற்றிய ஏதோ ஒரு விஷயம்தான் என்னை சமீரா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது. அவருடைய படங்களில் அவருடைய காதல் எப்பவும் பொங்கி வழியும் ஒன்றாக இருப்பதுதான் அவருடைய படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்த போது அவரிடம் போய் முழுமையாக சரணடைந்தேன். சமீராவாக நீங்கள் இன்று என்னைப் பார்ப்பதற்கான முக்கியக் காரணம் அவர்தான்.
அவ்வளவு அற்புதமான மனிதர்களுடன், அவ்வளவு புத்திசாலித்தமான நடிகர்களுடன் வேலை செய்யும் போது அவர்களுடைய நடிப்பை உயர்த்துவதும் பெரிய பொறுப்பு. சூழ்நிலைக்கு ஏற்றபடி எதிர்வினை ஆற்றுவதும் நடிப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தனுஷ் சார் மாதிரி ஒரு அற்புதமான நடிகர் உடன் இருக்கும் போது உங்களுக்கு வேறு வழி இல்லை. அவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது மிகச் சிறப்பாக நடிக்க வேண்டும். தேவாவுடன் சமீராவாக நடிக்கிற வாய்ப்பு கிடைத்ததற்கு நான் ரொம்ப நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
நாகார்ஜூனா சார், ஒரு நடிகராகவோ அல்லது ஒரு நபராகவோ வார்த்தைகளால் அவருக்கு ஒரு போதும் நியாயம் செய்ய முடியாது. ஆனால், நான் அவரை உண்மையிலேயே நேசிக்கிறேன், போற்றுகிறேன், அவர் மிகச் சிறந்தவர். அவரது வாழ்க்கைப் பயணம் சிறப்பு வாய்ந்தது, அது உத்வேகம் அளிக்கும் ஒன்று,” என உடன் நடித்தவர்களைப் பற்றியும், மேலும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் கடவுளுக்கும், ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், “சமீரா…மிகவும் ஒரு அற்புதமான படம், நான் ஏன் இதைச் சொல்கிறேன் என படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். என்னை நம்புங்கள், இந்தப் படம் மதிப்புள்ளதாக இருக்கும்,” என முடித்துள்ளார்.
103 days ago
103 days ago