மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
103 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
103 days ago
சினிமாதுறையில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் ரஜினிகாந்த். ரஜினி நடித்த முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' ஆகஸ்ட் 15, 1975ல் வெளியானது. அவர் 50வது ஆண்டு விழாவை ஓராண்டு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாட ரசிகர் மன்றங்கள், திரைத்துறையினர் தயாராகி வருகிறார்கள். ரஜினியின் 50வது ஆண்டில் 'கூலி, ஜெயிலர் 2' என இரண்டு பெரிய படங்கள் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, புரமோஷன் நிகழ்ச்சிகளையும் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் சேர்க்க வேலைகள் நடக்கின்றன.
கூலி படத்தின் நிகழ்ச்சிகளை 'ரஜினி 50' தொடக்கமாகவும், ஜெயிலர் 2 பட நிகழ்ச்சிகளை ரஜினி 50 நிறைவாகவும் பெரியளவில் நடத்த பட நிறுவனம் திட்டமிடுகிறதாம். தவிர, இந்த படங்களின் வசூலை ஆயிரம் கோடியாக கொண்டு வந்து,ரஜினிக்கும், தமிழ் திரையுலகிற்கும் புதிய சாதனையாக்கவும் பல்வேறு பிசினஸ் திட்டங்களும் மறைமுகமாக நடக்கிறதாம். சினிமாவில் 50 ஆண்டு, இரண்டு கமர்ஷியல் இயக்குனருடன் வேலை, ஆயிரம் கோடி வசூல் டார்க்கெட் படங்கள் என ரஜினியும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.
103 days ago
103 days ago