உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம்

வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம்


'தக்லைப்' விமர்சனங்கள், தன் கேரக்டர் மீதான பார்வை, கேலி, கிண்டல்கள் குறித்து திரிஷா இன்றுவரை நேரடியாக, மறைமுகமாக பதில் அளிக்கவில்லை. இன்னமும் திரிஷாவுக்கு தமிழில் எழுத, படிக்க தெரியாது. அதனால், பல சோஷியல் மீடியா விமர்சனங்கள் அவர் பார்வைக்கு போகவில்லை. மற்ற சில விமர்சனங்களை அவர் பார்வைக்கு போகவிடாமல் தடுத்துவிட்டார்களாம். அடுத்து சூர்யா ஜோடியாக 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. அந்த படம் ஹிட்டானால் அனைத்து மைனசும் மறைந்துவிடும். வெற்றி மட்டுமே பேசப்படும் என திரிஷா தரப்பு நம்புகிறது. திரிஷாக்கு தனி மேனேஜர், பிஆர்ஓ டீம், சோஷியல் மீடியா அட்வைஸர் கிடையாது. பல ஆண்டுகளாக இந்த அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக பார்த்து வருபவர் அவர் அம்மா உமா கிருஷ்ணன்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !