மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
103 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
103 days ago
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் 'லவ் மேரேஜ்'. சண்முக பிரியன் இயக்கி உள்ளார், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். வருகிற 27ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் விக்ரம் பிரபு பேசியதாவது: இந்தப் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை. இந்த படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் ஏற்பட்டது. இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது. படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு மாத காலம் வரை குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். இது மறக்க இயலாத அனுபவம்.
சினிமாவில் நடிகர், நடிகைகள் தாண்டி, மற்ற கதாபாத்திரங்களில் நடிப்போருக்கு 'ஸ்கிரிப்ட் பேப்பர்கள்' கிடைப்பது பெரிய விஷயம். 'ஷூட்டிங் ஸ்பாட்'டில் பார்த்துக்கொள்ளலாம் என்று உதவி இயக்குனர்கள் எளிதாக சொல்லிவிடுவார்கள். அந்த நிலை மாற வேண்டும். ஹீரோ, ஹீரோயின்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம், இதர நடிகர், நடிகைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். தமிழ் சினிமா இன்னும் பெரிய தளத்துக்கு செல்ல வேண்டும். அதுதான் என் விருப்பம்.
காதல் இல்லாமல் திருமணம் 'செட்' ஆகாது. காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. அதற்கேற்றபடி, படங்களும் மாறிக்கொண்டு இருக்கிறது. மக்களும் மாறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே என் ஆதரவு என்றுமே காதல் திருமணங்களுக்கு தான்''. என்றார்.
103 days ago
103 days ago