ஒரே நாளில் முக்கிய சினிமா பிரபலங்களுக்குப் பிறந்தநாள்
ADDED : 104 days ago
தமிழ் சினிமாவில் ஒரே நாளில், இன்றைய நான்கு முக்கிய சினிமா பிரபலங்களுக்குப் பிறந்தநாள் என்பது ஆச்சரிய ஒற்றுமை. 'ஜன நாயகன்' படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், 90களின் கடைசியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் தேவயானி, கடந்த சில வருடங்களில் வளர்ந்து வரும் நாயகனாக உள்ள கவின், 'பிரேமலு' மலையாளப் படம் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த, 'ஜன நாயகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மமிதா பைஜு உள்ளிட்டவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
இவர்களுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் சினிமா பிரபலங்களிடம் இருந்தும், அவர்கள் நடித்து வரும் படக்குழுவினடரிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் சமூக வலைதளங்களில் 'டைம்லைன்' முழுவதும் நிறைந்துள்ளது.