மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
99 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
99 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
99 days ago
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹிந்திப் படங்கள் பற்றியும், தென்னிந்தியப் படங்கள் பற்றியும் பேசியுள்ளது தென்னிந்தியப் படங்களுக்கான பெருமையைச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
“ஒவ்வொரு மொழி திரைப்படத்திற்கு என்று தனித்துவமான பலம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்திய சினிமா என்ற வார்த்தையை நான் விரும்பவில்லை. அதன் ஒரு பகுதி எனக்கு அந்நியமாகத் தோன்றுகிறது. இந்திய திரைப்படத் துறை தொடங்கிய போது அது நமது கலாச்சாரத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டு இருந்தது. காலப்போக்கில் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களால் அது மாறியது.
குறிப்பாக ஹிந்தி சினிமா உலகமயமாக்கலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது முதல் கலாச்சார ரீதியாக இணைக்கப்பட்ட கதாபாத்திரங்களிலிருந்து கேலிக்கூத்தான சில திரைப்படங்களும் உருவாக்கப்பட்டன.
ஆனால், இப்போது தென்னிந்தியத் திரைப்படங்கள் இந்திய கலாசாரத்தை அதிகமாகப் பிரதிபலிக்கின்றன. ஹிந்தி சினிமாவில் குறிப்பிட்ட காலம் மட்டுமே இருந்தது. உதாரணமாக 'டங்கல்' படம் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலித்தது. இந்திய கலாச்சாரத்துடன் ஒரு வேரூன்றிய படம் அது. அந்த வகையான படங்கள் இப்போது அரிதாகிவிட்டது.
பணம் மற்றும் வியாபாரத்தால் ஹிந்தித் திரைப்படத்தை உருவாக்குபவர்கள் பூர்வீக பார்வையாளர்களுடனான தொடர்பை இழந்துள்ளனர். அதே சமயம் தென்னிந்தியாவில் பெரும்பாலான பார்வையாளர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். சினிமாவில் 70, 80 சதவீத சந்தை கிராமப்புறங்களைச் சார்ந்தது. எனவே, தெரிந்தோ தெரியாமலோ நமது படங்களில் கிராமப்புறத் தொடர்பு உள்ளது.இது இந்திய கலாச்சாரத்தை பிரதிபலித்து, மேற்கத்திய ஊடகங்களில் எதிரொலிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண் நடித்து ஜுலை 24ல் வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' திரைப்படம் இந்தியக் கலாச்சாரத்தைப் பிரபதிலிக்கும் சரித்திர காலப் படமாக வெளியாக உள்ளது.
99 days ago
99 days ago
99 days ago