மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
99 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
99 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
99 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். நேற்றைய நாள் ஆரம்பித்த நிமிடத்திலேயே அவருடைய கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். அதைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த விஜய்யின் தீவிர ரசிகர்கள் அப்போதே வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
பின்னர் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்கள். எத்தனையோ சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தது ஓரளவிற்கே லைக்குகள், வியூஸ்கள் எனப் பெற்றாலும் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இருக்கும் ஒரு போட்டோவைப் பகிர்ந்து அவருக்கு “ஹாப்பி பர்த்தே பெஸ்டஸ்ட்' என வாழ்த்தி, பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.
அவருடைய வாழ்த்துப் பதிவு எக்ஸ் தளத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 69 ஆயிரம் லைக்குகளையும், 11 ஆயிரம் மறுபதிவுகளையும், 1000க்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது. இன்ஸ்டா தளத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 9 ஆயிரத்திற்கும் அதிகமான கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது.
பல ரசிகர்கள் அது எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என எக்ஸ் தளத்தின் 'க்ரோக்' ஏஐயிடம் கேள்வி கேட்ட கமெண்ட்டுகளையும் பார்க்க முடிந்தது.
99 days ago
99 days ago
99 days ago