உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு

ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு


தமிழில் 'கல்யாண சமையல் சாதம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில், ஆமிர்கான், ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் உருவான ஹிந்திப் படம் 'சிதாரே ஜமீன் பர்' கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு விமர்சகர்களும், சினிமா பிரபலங்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

படத்தைப் பார்த்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, “சிதாரே ஜமீன் பர்…மிகவும் பிரகாசமாக இருக்கிறது…இது உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், கைதட்ட வைக்கும்…ஆமிர்கானின் அனைத்து கிளாசிக் படங்களைப் போலவே, நீங்கள் புன்னகையுடன் வெளியேறுவீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் இப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆமிர் நடித்து கடைசியாக வெளிவந்த 'லால் சிங் சத்தா' படம் தோல்விப் படமாக அமைந்த நிலையில் இந்தப் படம் வியாபார ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !