உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு…

'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு…


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கூலி'. இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதியன்று வெளியாக உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷனை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளனர்.

'சவுண்ட்டை ஏத்து…இன்று மாலை 6 மணிக்கு,'' என்று மட்டும் தயாரிப்பு நிறுவனம் சற்று முன் அறிவித்துள்ளது. அது படத்தின் முதல் சிங்கிள் பற்றிய அறிவிப்பு என ரஜினி ரசிகர்கள் யூகித்துள்ளனர்.

ரஜினி நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத், இந்த 'கூலி' படத்திற்கும் அதிரடியான பாடல்களைக் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ வந்துள்ள நிலையில் அதை ஓரம் கட்டும் விதமாகவும் இந்த 'கூலி' முதல் சிங்கிள் அறிவிப்பை வெளியிடுகிறார்கள் என்றும் ஒரு கிசுகிசு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !