உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா'

சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா'


தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தற்போது ராசியான ஒரு நடிகை எனப் பெயரெடுத்தவர் ராஷ்மிகா மந்தனா. 'அனிமல், புஷ்பா 2, ச்சாவா' என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் வசூல் படங்களில் நடித்து ஹிந்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடித்த 'சிக்கந்தர்' படத்தையும் பெரிதும் எதிர்பார்த்தார் ராஷ்மிகா. ஆனால், அந்தப் படம் தோல்வியாக அமைந்து ஹிந்தியில் அவருடைய முன்னேற்றக் கனவை சரிய வைத்தது. அவருடைய கதாபாத்திரம் பற்றியும் பெரிதாகப் பேசப்படவில்லை.

இருந்தாலும் அந்தக் குறையை கடந்த வாரம் வெளிவந்த 'குபேரா' படம் காப்பாற்றியுள்ளது. வசூலில் மட்டுமல்லாது படத்தில் நடித்துள்ளவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் 'சமீரா' என்ற ஒரு எளிமையான பெண் கதாபாத்திரத்தில் ரஷ்மிகாவின் இயல்பான நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 'சிக்கந்தர்' படத்தில் இழந்த பெயரை, இந்த 'குபேரா' காப்பாற்றிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !