உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை!

பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை!


தற்போது எச். வினோத் இயக்கி உள்ள 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய், நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு அரசியல், சினிமாத்துறையை சார்ந்தவர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இன்று தனது சமூக வலைதளத்தில் விஜய் ஒரு பதிவு போட்டு உள்ளார்.

அந்த பதிவில், 'எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அதோடு உலகம் எங்கிலும் இருந்து வாழ்த்து செய்தி அனுப்பிய திரைப்படத்துறை, ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் என் நெஞ்சில் வாழும் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மக்களுக்கான சேவை செய்யும் என்னுடைய பயணத்தில் நீங்கள் அளிக்கும் ஆதரவு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய இந்த பயணத்தில் நம் அனைவரும் கைகோர்த்து செல்வோம்' என தெரிவித்திருக்கிறார் விஜய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !