ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்'
ADDED : 100 days ago
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள முதல் படம் 'பீனிக்ஸ் வீழான்'. இந்த படத்தை அனல் அரசு இயக்கி உள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஒரு பாக்ஸராக நடித்திருக்கிறார் சூர்யா சேதுபதி. அவருடன் வரலட்சுமி சரத்குமார், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள, இந்தா வாங்கிக்கோ என்கிற பாடலை நேற்று விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த பீனிக்ஸ் வீழான் படம் வருகிற ஜூலை 4-ம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இது குறித்த ஒரு போஸ்டரை இப்படத்தின் இயக்குனரான அனல் அரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.