உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்

கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்


கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை நேற்று (ஜூன் 23) நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தார்கள். அவருக்கு தான் கொக்கைன் கொடுத்ததாக பிரதீப் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரும் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டதோடு தனக்கு ஜாமின் கேட்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், பிரசாத் என்ற அந்த நபர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி நடிகர் கிருஷ்ணாவுக்கும் தான் கொக்கைன் கொடுத்ததாக தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருந்து வரும் நடிகர் கிருஷ்ணாவையும் தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். மேலும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்பது தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !