'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி!
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் படத்தை இயக்கி, நடித்துள்ளார். 'டான் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் இவ்வருடம் அக்டோபர் 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகத்தில் இ.டி ரெய்டு நடத்தினர். இதனால் அவர் தலைமறைவாக இருந்தார் .தற்போது இந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக முடிவடைந்தது.
இதற்கிடையில் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கான பின்னனி இசை பணியை மேற்கொண்டு வந்தனர். இப்போது இட்லி கடை படத்தின் முதல் பாதிக்கான பின்னணி இசை பணி முடிவடைந்தது. சிறிய இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பாதிக்கான பின்னனி இசை பணியை தொடங்கவுள்ளனர் என கூறப்படுகிறது.