பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான ஆடியோ
ADDED : 143 days ago
சிறுநீரக பிரச்னையால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம். 2முறை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார். அவருக்கு பல நடிகர்கள் உதவினார்கள். இப்போது மீண்டும் அவர் அட்மிட் ஆகி இருக்கிறார். இந்நிலையில், தனக்கு என்ன பிரச்னை, என்ன மாதிரியான ட்ரீட்மென்ட் என்று உருக்கமான ஒரு ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தனக்கு உதவியவர்கள் பட்டியலில் நடிகர்கள் சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், நிழல்கள் ரவி, ரவி மோகன், சிம்பு, கமல்ஹாசன் என பல பெயர்களை நன்றியுடன் குறிப்பிட்டு இருக்கிறார். சில ஆண்டுகளாக நடிக்கவில்லை. வருமானம் இல்லை, பொருளாதார ரீதியாக சிரமப்படுகிறேன். ஆனாலும். இந்த சமயத்தில் உதவியவர்களுக்கு நன்றி. நான் நன்றாக குணமாக ஆண்டவனை வேண்டுங்கள் என்றும் அந்த ஆடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்.