கார்த்தி படத்தில் நானி?
ADDED : 100 days ago
'சர்தார் -2, வா வாத்தியார்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படங்களை அடுத்து அவரது 29வது படத்தை 'டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்குகிறார். ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைக்களத்தில் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பை காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நானியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நானி இதில் முக்கிய கதாபாத்திரமா அல்லது கேமியோ கதாபாத்திரமா என்பது குறித்து தகவல் இல்லை. அதேபோல் நானியின் 'ஹிட்' 3ம் பாகத்தில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.