உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்?

'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்?


தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜுனியர் என்டிஆர். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர்.

தற்போது ஹிந்தியில் 'வார் 2' படத்தில் நடித்து முடிக்க உள்ளார். 'கேஜிஎப்' பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியா படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் சில வாரங்களாகவே வெளிவந்தது. அந்தப் படம் 'முருகர்' பற்றிய படமாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியானது.

இதனிடையே, 'வார் 2' படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்ற ஜுனியர் என்டிஆர் கையில் 'முருகர்' பற்றிய ஆங்கிலப் புத்தகம் ஒன்று இருந்தது. ஆனந்த் பாலசுப்ரமணியம் எழுதிய 'முருகா - த லார்ட் ஆப் வார், த காட் ஆப் விஸ்டம்' என்ற புத்தகம்தான் அது.

தமிழ்க் கடவுளான முருகர் தெலுங்கு மக்களிடம் கார்த்திகேய, சுப்பிரமணிய சாமி, குமாரசாமி என்றும் அழைக்கப்படுகிறார். சரித்திர காலப் படங்கள் தற்போது பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் த்ரிவிக்ரம், ஜுனியர் என்டிஆர் இணைய உள்ள படம் 'முருகர்' பற்றிய படமாக இருக்கும் என்று வந்த தகவல்கள் இதன் மூலம் உறுதியாக வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !