தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி
ADDED : 100 days ago
தெலுங்கில் கிர்த்தி ஷெட்டிக்கு தனி மவுசு. அவர் நடிப்பு, டான்ஸ் அழகிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஆனால், தமிழில் அவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை. குறிப்பாக, வாரியர், கஸ்டடி ஆகிய படங்கள் அவரை பெரிய ஹீரோயின் ஆக்கவில்லை. வாரியர் படத்தில் இடம் பெற்ற புல்லட்டு பாட்டு மட்டும் ஹிட்டானது.
இப்போது கார்த்தி ஜோடியாக வா வாத்தியார், பிரதீப் ரங்கநாதனுடன் எல்ஐகே, ரவிமோகன் ஜோடியாக ஜீனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த 3 படங்களும் இந்த ஆண்டு ரிலீஸ். இந்த படங்கள் வெற்றி பெற்றால் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என நினைக்கிறார். மனதளவில் கயாடு லோஹர், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோரை போட்டியாளராக நினைக்கிறாராம் கிர்த்தி ஷெட்டி.