மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
95 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
95 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
95 days ago
1985ம் ஆண்டு வெளியாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் 'ஆண்பாவம்'. கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த பாண்டியராஜன் 'கன்னிராசி' படத்திற்கு பிறகு இயக்கிய 2வது படம். இந்த படத்தை சிவாஜி நடித்த 'படித்தால் மட்டும் போதுமா', கே.பாக்யராஜ் இயக்கிய 'தூறல் நின்னு போச்சு' ஆகிய இரண்டு படங்களையும் கலந்து உருவாக்கிய படம் தான் ஆண்பாவம்.
அண்ணன் பாண்டியன் பார்க்க வேண்டிய பெண் ரேவதி. ஆனால் அவர் விலாசம் மாறி சீதாவை பெண் பார்த்துவிட்டு திரும்பி விடுவார். அதன்பின் நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை.
இந்த படத்தில் நடிக்க சீதா முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. பாண்டியன் ஜோடியாக நடிக்க தயங்கினார். ஆனால் நண்பர்களும், சீதாவின் தந்தையும் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார்கள். படப்பிடிப்பில் பாண்டியராஜனுக்கு ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்தார் சீதா. படத்தின் வெற்றிக்கு பிறகு அதற்காக சீதா மன்னிப்பு கேட்டார்.
இந்த படத்தில் இரண்டாவது கேரக்டரில் ரேவதிதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் பாண்டியராஜன். அப்போது ரேவதி பயங்கர பிசியாக இருந்தார். என்றாலும் பாண்டியராஜனுக்காக மனமிறங்கி மற்ற தயாரிப்பாளர்களிடம் பேசி 5 நாள் கால்ஷீட் தருகிறேன் என்று சொன்னார். அதன்பிறகு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்தார் பாண்டியராஜன், ரேவதி வரும் முக்கியமான காட்சிகளை 5 நாட்களில் எடுத்து விட்டு அதன்பிறகு எடுத்த காட்சிகளை வைத்து படம் முழுக்க அவரது கேரக்டரை கொண்டு வரும் வகையில் மாற்றம் செய்தார்.
ரேவதி 5 நாட்கள் நடித்துக் கொடுத்தார். ஒரு பாடல் காட்சி தவிர எடுக்கப்பட்ட காட்சிகள் வெறும் 6 தான். ஆனாலும் படம் முழுக்க அந்த கேரக்டரை கொண்டு சென்றார் பாண்டியராஜன். குறிப்பாக ரேவதி கிணற்றுக்குள் விழுவதில் இருந்து அவர் குணமாகி வரும் வரை 5 காட்சிகள் வரும். ஆனால் அந்த காட்சிகளில் ரேவதி நடிக்கவில்லை. ஆனால் அவர் பிரேமில் இருப்பது போன்று படமாக்கினார். படம் வெளியானதும், 40 நாள் நடித்த சீதா கேரக்டரை விட 5 நாள் நடித்த ரேவதி கேரக்டரே பேசப்பட்டது.
95 days ago
95 days ago
95 days ago