உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன

குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன

தெலுங்கில் வெங்கட் அட்லூரி இயக்கிய சார் என்ற படத்தில் நடித்தார் தனுஷ். இந்த படம் தமிழில் வாத்தி என்ற பெயரில் வெளியானது. அதன் பிறகு தற்போது மீண்டும் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள குபேரா படத்தில் நடித்திருக்கிறார். ஜூன் 20ம் தேதி திரைக்கு வந்த இந்த படத்தில் தனுஷ் உடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் வரவேற்பை பெற்ற படம் தமிழில் எடுபடவில்லை. அதேசமயம் தெலுங்கில் இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது தனுஷின் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த குபேரா படத்தின் எட்டு நாள் வசூல் குறித்த பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் இந்த படம் உலக அளவில் கடந்த 8 நாட்களில் 118 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !