உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்?

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்?

ரஜனியை வைத்து கூலி படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக பிஸியாக இருந்தாலும் அவரின் ஜீ ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களை தொடர்ந்து தயாரிக்கவுள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‛பென்ஸ்' என்ற படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து லோகேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதை மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, மலைக்கோட்டை வாலிபன் ஆகிய படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி தான் இயக்குகிறார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சூரி தற்போது ‛மண்டாடி' என்ற படத்தில் மீனவராக நடிக்கிறார். அதை முடித்ததும் இந்த படத்தில் நடிப்பார் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !