மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி
ADDED : 95 days ago
களவாணி படத்தின் மூலம் பிரபலமானவர்கள் இயக்குனர் சற்குணம் மற்றும் நடிகர் விமல். இந்த படத்திற்கு பிறகு ‛வாகை சூடவா, களவாணி 2' ஆகிய படங்கள் இந்த கூட்டணியில் வெளியானது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சற்குணம் இயக்கத்தில் விமல் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கலாட்டா பேமிலி' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதில் கதாநாயகியாக அனிகா விக்ரமன் நடித்துள்ளார். ஆனந்த் ராஜ், வேலராமமூர்த்தி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காமெடி கலந்த படமாக உருவாகி உள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.