உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

ஏஸ் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் தலைவன் தலைவி. அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், ஜூலை 25ல் இப்படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. அவருடன் பாலிவுட் நடிகை தபு முக்கிய வேடத்தில் நடிக்க, வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தா நாயகியாக நடிக்கிறார். பூரி ஜெகந்நாதன் உடன் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கிறார். இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியது. கமர்சியல் கதையில் உருவாகும் இதை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் , ஹிந்தி என 5 மொழிகளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு மஹதி ஸ்வரா சாகர் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !