உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம்

சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம்

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், சென்னை பட்டினப்பாக்கம் ஏரியாவில் பல ஆண்டுகள் வசித்தார். அவர் இறுதி சடங்கும் அங்கே தான் நடந்தது. இந்நிலையில் எம்.எஸ்.வி வீடு இருக்கும் பட்டினபாக்கம் டிமாண்டி சாலை பெயரை எம்.எஸ்.வி சாலை என பெயர் மாற்ற சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து எம்.எஸ்.வி மகன் பிரகாஷ், தினமலருக்கு அளித்த பேட்டியில், அப்பா வசித்த எங்கள் வீடு இருக்கும் தெருவுக்கு அவர் பெயர் வைக்கப்பட உள்ளது மகிழ்ச்சி. இதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் நேரு மற்றும் சென்னை மேயர், துணை மேயருக்கு நன்றி. விரைவில் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும். பின்னர் முறைப்படி பெயர் சூட்டும் விழா நடக்கும்.

அப்பாவும், முதல்வரின் அப்பாவுமான கருணாநிதியும் அவ்வளவு அதிகமான நட்புடன் இருந்தார்கள். இன்றும் அரசு விழாக்களில் இடம் பெறும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசை அமைத்தவர் அப்பாதான். அதை செய்தவர் முதல்வரின் அப்பா. அதனால் தெரு பெயர் சூட்டும் விழாவுக்கு முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். அடுத்த எம்.எஸ்.வி பெயரில் மணி மண்டபம், சிலை போன்ற கோரிக்கைகளை அரசிடம் வைக்க உள்ளோம் என உருக்கமாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !