மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
93 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
93 days ago
ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் 'பாம்'. அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, கிச்சா ரவி நடித்துள்ளனர். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.
படம் குறித்து அவர் கூறியதாவது: முழுநீள காமெடி படமாக உருவாகியுள்ளது. ஒரு கற்பனை ஊரில் நடக்கும் பிரச்னையை படம் மையப்படுத்துகிறது. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு தரப்பினருக்கும், நம்பிக்கை இல்லாத மற்றொரு தரப்பினருக்குமான பிரச்னையால் பிரிந்திருக்கும் ஊரை, இரு நண்பர்கள் எப்படி இணைக்கின்றனர் என்பது திரைக்கதை. நண்பர்களாக அர்ஜூன் தாஸ், காளி வெங்கட் நடித்துள்ளனர். ஆகஸ்ட்டில் படம் திரைக்கு வருகிறது. என்றார்.
93 days ago
93 days ago