தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு
ரொம்பவே குறைவான சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம் ஒன்று நடிகர் மம்முட்டிக்கு தற்போது கிடைத்துள்ளது. மம்முட்டி சினிமாவில் நுழைவதற்கு முன்பு எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கலைக்கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பிறகு அரசு கலைக்கல்லூரியில் சட்டம் படித்தார். இந்த நிலையில் தற்போது மகாராஜா கலை கல்லூரியில் மம்முட்டியின் திரையுலக வாழ்க்கை ஒரு பாடமாக பாட புத்தகத்தில் இணைக்கப்பட்டது.
நான்கு வருட பிஏ வரலாறு (ஹானர்ஸ்) படிப்பை படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்கான 'ஹிஸ்டரி ஆப் மலையாளம் சினிமா' என்கிற புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. மம்முட்டி மட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படித்து முதன்முதல் பட்டம் வாங்கிய தாட்சாயினி வேலாயுதம் என்கிற பெண்ணின் வாழ்க்கையும் இதே வருடத்திற்கான இந்திய சமூக அரசியல் என்கிற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.