உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரேமலு இயக்குனரின் படத்தில் இணைந்த நிவின்பாலி, மமிதா பைஜூ : பஹத் பாசில் தயாரிக்கிறார்

பிரேமலு இயக்குனரின் படத்தில் இணைந்த நிவின்பாலி, மமிதா பைஜூ : பஹத் பாசில் தயாரிக்கிறார்

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் பிரேமலு முக்கியமான படம். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கலகலப்பான ரொமாண்டிக் காமெடியான இந்த படம் மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் வரவேற்பை பெற்றது. கிரிஷ் ஏடி இயக்கியிருந்த இந்த படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் மலையாளம் மற்றும் தமிழில் தற்போது முன்னணி கதாநாயகி வரிசைக்கு உயர்ந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அதே இயக்குனரின் டைரக்சனில் உருவாகும் பெத்லகேம் குடும்ப யூனிட் என்கிற படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார் மமிதா பைஜூ.

இந்த படத்தில் கதாநாயகனாக நிவின்பாலி நடிக்கிறார். பிரேமலு படத்தை தயாரித்தது போலவே இந்த படத்தையும் பாவனா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து நடிகர் பஹத் பாசில் மற்றும் இயக்குனர் திலீஷ் போத்தன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் நிவின் பாலி தமிழில் நடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் தயாராகி ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதையடுத்து ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தில் நிவின்பாலி வில்லனாக நடிக்கிறார். இன்னொரு பக்கம் மலையாளத்தில் பேபி கேர்ள், தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் சர்வம் மாயா ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நிவின்பாலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !