ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு
பிக்பாஸ் ராஜூ ஹீரோவாக நடிக்கும் படம் ‛பன் பட்டர் ஜாம்'. இந்த படத்தில் அவர் அப்பாவாக சார்லி, அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார்கள். இது ஜாலியான கல்லுாரி காதல், நட்பை சொல்லும் படம் என்றாலும், அதை மீறி பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது. அதை படக்குழு சஸ்பென்ஸ் ஆக வைத்து இருக்கிறது. ஆனால், நேற்று நடந்த விழாவில் மைக் பிடித்த சார்லி பல ரகசியங்களை தனது பேச்சில் சொல்ல, படக்குழு அதிர்ந்தது. அதை சொல்ல வேண்டாம் என கீழே இருந்து சொன்னார்கள். அடுத்து சார்லி படத்தில் இடம் பெற்ற சில முக்கியமான டயலாக்குகளை சொல்ல, அனைவரும் மிரண்டு போனார்கள். அதை உணர்ந்த சார்லி டக்கென பேச்சை முடித்தார்.
கடைசியில் பேசிய ராஜூ 'இந்த படத்தில் நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஜாலியாக படம் பார்க்கலாம். கதையில சில அழுத்தமான விஷயங்களை சொல்கிறோம்.'' என்றார்.
நீண்ட காலத்துக்குபின் பக்கா காமெடி அம்மா ரோலில் நடித்து இருக்கிறார் சரண்யா. எந்த படத்தையும், பாடலையும் வெளிப்படையாக பாராட்டாத நடிகர் விஜய், இந்த பட டீசர் பார்த்துவிட்டு வேற லெவல் பா, நான் படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என பாராட்டியிருக்கிறார். அதற்கு காரணம், ஹீரோ ராஜூ.