உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சரிகமப' வெற்றியாளர்களுக்கு பரிசு தொகை அறிவிப்பு

'சரிகமப' வெற்றியாளர்களுக்கு பரிசு தொகை அறிவிப்பு

ஜீ தமிழ் சேனலில், ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர இசை நிகழ்ச்சி 'சரிகமப சீனியர்ஸ்'. தற்போது இதன் 5வது சீசன் தொடங்கி உள்ளது. அர்ச்சனா தொகுத்து வழங்கும் இதில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள்.

28 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் பரிசாக 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ரன்னர் அப் போட்டியாளருக்கு 10 லட்சம் ரொக்கப் பரிசும், இரண்டாவது ரன்னர் அப் போட்டியாளருக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கமும், மக்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளருக்கு 5 லட்சம் மதிப்புள்ள தங்கமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !