வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ்
ADDED : 94 days ago
விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதற்கடுத்து தனுஷ் நடிக்க உள்ள படத்தை வினோத் இயக்க உள்ளதாக செய்திகள் வந்தன. அந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தற்போது 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' படத்தைத் தயாரித்து வருகிறது. இதற்கடுத்து கவின், நயன்தாரா நடிக்கும் படமும் தயாரிப்பில் உள்ளது.
வினோத், தனுஷ் கூட்டணி குறித்து சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வந்த நிலையில் அதில் ஒரு பதிவை ஷேர் செய்து எமோஜிக்களைப் பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். இதன் மூலம் அவர்களுடன் சாம் இணைந்து பணியாற்றுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வினோத் இயக்கும் ஒரு படத்திற்கும், தனுஷ் நடிக்கும் ஒரு படத்திற்கும் சாம் சிஎஸ் இசையமைக்கப் போவது இதுவே முதல் முறை.