சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தை இயக்கியுள்ள சிவகுமார் முருகேசனின் இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இவர், ‛ஆண்பாவம் பொல்வாதது' படத்தில் திரைக்கதை எழுத்தாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை நடிகர் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான ஒரு புரொமோ வீடியோவிற்கான படப்பிடிப்பை இவ்வாரத்தில் படமாக்க உள்ளனர். இப்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை புரொமோ வீடியோ உடன் வருகின்ற பிப்ரவரி 17ம் தேதியன்று சிவகார்த்திகேயனின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்கிறார்கள்.