‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ்
ADDED : 92 days ago
2018ம் ஆண்டில் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி நடித்து வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. சமூக பிரச்னைகளையும், நியாயமான கேள்விகளையும் கேட்டு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மாரி செல்வராஜ் இன்று முன்னனி இயக்குனராக வலம் வருகிறார்.
இந்த நிலையில் ஹிந்தியில் இத்திரைப்படத்தை 'தடக் 2' என்கிற தலைப்பில் ரீமேக் செய்துள்ளனர். ஷாசியா இக்பால் இயக்கியுள்ள இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் சித்தார்த் சதுர்வேதி, திரிப்தி டிம்ரி நடித்துள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் வெளியாகி பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதியன்று திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.