அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா
ADDED : 202 days ago
அல்லு அர்ஜுன் நடிக்கும் தனது ஆறாவது படத்தை இயக்குகிறார் அட்லி. சூப்பர் ஹீரோ மாதிரியான சயின்ஸ் பிக்ஷன் கதையில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு தொலைக்காட்சி விளம்பரப் படத்தை இயக்கப் போகிறார் அட்லி. அந்த விளம்பர படத்தில் பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங், பாபி தியோல் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த இந்த விளம்பர படத்தை ஒரு குறும்படம் போல் திரைப்படத்துக்கு இணையாக பிரம்மாண்டமாக படமாக்குகிறாராம் அட்லி.