உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான்

ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான்

அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பிரமாண்டத்திற்கு தயாராகி விட்டார் நடிகர் ரன்பீர் கபூர். அவரது அடுத்த படமாக மிக பிரமாண்டமாக சரித்திர படமாக உருவாகிறது ராமாயணா. ராமர் வேடத்தில் ரன்பீர் நடிக்கிறார். சாய் பல்லவி இதில் சீதா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சன்னி தியோல் அனுமன் கதாபாத்திரத்தில் நடிக்க, கேஜிஎப் புகழ் நடிகர் யஷ் இந்த படத்தில் வில்லனாக ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இந்த படம் குறித்து கன்னட திரையரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

அதேசமயம் இந்த முதல் பாகத்தில் யஷ் நடிக்கும் கதாபாத்திரம் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறது என்று ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் கதை அயோத்தியில் துவங்கி அதன்பிறகு வனவாசம் செல்லும் வரை ராமன் கதாபாத்திரத்தை மட்டுமே மையப்படுத்தி நகர்வதால் படத்தின் கிளைமாக்ஸ் நெருங்கும்போது தான் ராவணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறும் என்றும் இரண்டாம் பாகத்தில் தான் யஷ் கதாபாத்திரம் இன்னும் முக்கியத்துவத்துடன் காட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !