மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி
பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி படம் ஜூலை 25ல் ரிலீஸ் ஆகிறது. சென்னையில் நடந்த விழாவில் விஜய்சேதுபதி பேசியதாவது, எனக்கும், பாண்டிராஜ்க்கும் ஏதோ மனஸ்தாபம். நான் அவருடன் பணி புரிய கூடாது என இருந்தேன். அவரும் அந்த மனநிலையில் இருந்தார். ஆனால், இயக்குனர் மிஷ்கின் பிறந்தநாளில் ஒன்றாக இணைந்தோம். இந்த படம் உருவானது. இதில் ஆகாசவீரன் என்ற கேரக்டரில் நடித்து இருக்கிறேன். கணவன், மனைவி உறவு குறித்து படம் பேசுகிறது.
டைவர்ஸ்சுக்கு அவசரப்பட வேண்டும் என்பது என் கருத்து. இப்போது ட்ரோல் குறித்து பேசுகிறார்கள். இன்றைக்கு எதையும் தடுக்க முடியாது. அந்த காலத்தில் கார்ட்டூன் மாதிரியான விமர்சனங்கள் இருந்தன. இப்போது ட்ரோல் வருகிறது. புதுப்படங்கள் மட்டுமல்ல, பழைய படங்களை கூட விமர்சனம், கிண்டல் செய்கிறார்கள்.
நாம் பொது வெளியில் ஒரு படைப்பை கொடுத்துவிட்டோம், மற்றவர்களின் விமர்சனங்களை தடுக்க முடியாது, ஊர் வாயை மூட முடியாது. ட்ரோல் இப்போது இருக்கிற நையாண்டி. நாமும் இப்படி பலவகைகளில் விமர்சனம் செய்து இருக்கிறோம். நம் மீது தவறு இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும். '' என்றார்.
விஜய்சேதுபதி மகன் நடித்த பீனிக்ஸ் படத்துக்கு, அவர் மகன் குறித்து பல்வேறு ட்ரோல் வந்தநிலையில், விஜய்சேதுபதி இப்படி பேசியுள்ளார்.