உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு

சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு

பிரபுதேவா, வடிவேலு ஏற்கனவே இணைந்து காதலன், எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய், மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் கலகலப்பான படங்களில் நடித்தனர். மேலும் பிரபுதேவா இயங்கிய போக்கிரி, வில்லு படங்களிலும் வடிவேலு காமெடியில் பட்டைய கிளப்பி இருப்பார். ஒருகட்டத்திற்கு பின்னர் இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை. அவ்வப்போது சினிமா தொடர்பான விழாக்களில் சந்தித்து கொள்வர்.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபுதேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை டார்லிங், 100, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். இதனை துபாய் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !