உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ்

15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ்

‛சட்டமும் நீதியும்' என்ற வெப்சீரிஸில் கதை நாயகனாக நடித்து இருக்கிறார் ‛பருத்திவீரன்' சரவணன். அதில் பாதிக்கப்பட்ட, அதாவது ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்து இறக்கும் ஒருவருக்கு நீதி வாங்கி தருகிற வக்கீல் கேரக்டரில் நடித்து இருக்கிறார். பாலாஜி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.

இந்த கேரக்டர் குறித்து சரவணன் பேசுகையில் ''நான் டிராபிக் ராமசாமி மாதிரி நீதிக்காக போராடுகிற கேரக்டரில் நடித்து இருப்பதாக பலர் பாராட்டுகிறார்கள். நிஜ டிராபிக் ராமசாமியுடன் எனக்கு பழக்கம் உண்டு. அவர் செய்த சாதனைகள் அதிகம். இந்த வெப்சீரிஸில் நீதி கிடைப்பதாக கதை முடிகிறது. ஆனால், நிஜத்தில் வேறு மாதிரி. நானே சில வழக்கு போட்டு இருக்கிறேன். இன்னமும் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். நமக்கு நீதி கிடைக்கும், ஆனால் சற்றே தாமதமாக கிடைக்கும். நம் நாட்டில் போடப்படுகிற வழக்குகள் அதிகம். நீதிமன்றம் குறைவு. எனவே, அதற்கு காலம் எடுத்துக்கொள்ளும். நல்ல கேரக்டர் கொடுத்து, நல்ல கதையை கொடுத்த இயக்குனருக்கு நன்றி. 15 நாட்களுக்குள் இந்த வெப்சீரிஸை நடித்து கொடுத்தோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !