ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்!
ADDED : 138 days ago
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த 'மதகஜராஜா' படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றது. அதையடுத்து சூப்பர் குட் பிலிம்ஸின் 99வது படத்தில் நடிக்கிறார் விஷால். இந்த படத்தை ரவி அரசு இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க போகிறார்.
இந்த நிலையில் தற்போது விஷால் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கத்தின் கட்டடப் பணிகள் முடிந்ததும் எனது திருமணம் அந்த கட்டடத்தில் நடைபெறும் என்று கூறியிருந்தேன். அந்த வகையில் ஒன்பது வருடங்கள் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் மொத்த பணிகளும் முடிவடைந்து விடும். அதனால் வருகிற ஆகஸ்டு 29ம் தேதி எனது பிறந்த நாளில் திருமணம் குறித்த அந்த குட் நியூஸை வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார் விஷால்.