உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி!

ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி!


ஜீவா நடிப்பில் 'பிளாக்' என்ற படத்தை இயக்கியவர் கே.ஜி.பாலசுப்பிரமணி. அப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது. இந்நிலையில் தற்போது ஜீவா நடிக்கும் 46வது படத்தையும் அதே கே.ஜி. பாலசுப்பிரமணியே இயக்குகிறார். ஜீவாவுடன் ரபியா கட்டூன், பப்லு பிரித்திவிராஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை கே.ஆர்.குரூப்ஸ் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நடிகர் விஷால், திருப்பூர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !