'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் படம் 'மிஸ்டர் பாரத்'. டி டியூப் பிரபலங்களான பாரத் - நிரஞ்சன் இயக்குகிறார்கள். பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பாலா சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கடைசி நாளன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்தினார்.
இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான சுதன் சுந்தரம் கூறும்போது, “இளம் குழு என்பதாலேயே இவர்களது தெளிவு, திட்டமிடல் மற்றும் அர்ப்பணிப்பு ஆச்சரியப்படுத்தியது. கதை அம்சமே எங்களை ஈர்த்தது. திட்டமிட்டபடி நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் மிக சுறுசுறுப்பாக பணியாற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடித்தனர் என்றார்.